சேவை

இன்று இந்நாட்டு கலாச்சாரத்தில் எம் பாரம்பரிய கலையால் அழகுபடுத்தும் நான் என்னுக்குள் இருக்கும் 25வருட அனுபவத்தை உங்கள் இல்லத்தில் வந்தே நிரூபிக்க தயாராகவுள்ளேன்.

முக அலங்காரம் செய்தல்

பெண்களின் உதடுகளை கவிஞர்கள் பூவிதழ்களுக்கு ஒப்பிட்டு சொல்லும்போதே அதனுடைய மெதுமையும், அழகும் வெளிப்படுகின்றன. ஒருவரின் அழகை பிரதிபலிப்பதில் அவரின் சிரிப்பு முக்கிய இடத்தைப் பெறுகின்றது. சிரிக்கும்போது உதடும், பற்களும் இணைந்து தனியழகை தோற்றுவிக்கின்றது. தன்னுடைய முகம் அழகாக இல்லையே என்ற ஏக்கம் பல பெண்களை வாட்டுவது யாவரும் அறிந்ததே. அவர்களும் தங்களை அழகாக்கும் மேக்கப் செய்து கொண்டால் அழகாக தோற்றமளிப்பார்கள். உங்கள் முகம் அழகாக பிரகாசிக்க எங்களை தொடர்பு கொள்ளுங்கள் இன்றே இப்பொழுதே . கல்யாண மாலை: திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுகின்றன என்பது யாவரும் அறிந்ததே. கல்யாணத்தன்று அணியும் மாலைகள் அபியில் கிடைக்கும் என்பது நீங்கள் அறிந்ததே. எங்களிடம் கல்யாண மாலைகள், முகூர்த்த மாலைகள், வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்ற மாலைகள் சிறப்பாக குறித்த நேரத்தில் ஏற்பாடு செய்து தரப்படும்.


மணமகள் அலங்காரம்

உலகம் முழுவதும் நடைபெறுகின்ற பெரும்பாலான திருமண வைபவங்களில் மணமகள் அலங்காரம் என்பது கூடுதல் முக்கியத்துவம் பெறுகின்றது . மணமகள் அலங்காரம் என்பது வரவேற்பு அலங்காரம், முகூர்த்த அலங்காரம் ஆகியவற்றை உள்ளடக்கியது. மணப்பெண் அலங்காரம் என்பது எல்லா சமூகத்தினரும் தங்கள் தங்கள் சமய, கலச்சாரத்திற்கு ஏற்ப திருமணமாகப் போகும் பெண்ணை அலங்கரிப்பது என கூறலாம். தமிழர் சமூகத்தை பொறுத்தளவில் மணப் பெண் அலங்காரம் என்பது கலாச்சார பாரம்பரியத்தை முதன்மைப் படுத்தி தொன்று தொட்டு பின்பற்றப் பெற்று வந்துள்ளது. இத் தினத்தில் மணப் பெண் சேலை அணிவித்து, மூக்குத்தி, காதணி, கொண்டை, நகைகள், பூ மாலை என்பன அணியப் பெற்று தமது சமய, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பெண்ணாக தோற்றமளிப்பாள். திருமணமாகும் நாள் ஒரு பெண்ணின் புனிதமான நாளாகவும், மகிழ்ச்சியில் பூரித்து இன்புற்று இருக்கும் நாளாகவும் அமைவதால் அப் பெண்ணின் அதிஉயர் அழகுத் தோற்றத்தை எடுத்துக்காட்டுவதற்காக மணப் பெண் அலங்காரம் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றது. கல்யாணம் என்பது ஆயிரங்காலத்து பயிர்’ என்று சொல்வார்கள். அதனால்தான் அந்த நாளை மங்களகரமாக கொண்டாடுகிறார்கள். திருமண வீட்டிற்கு சென்றால் அனைவருடைய கண்களும் மணமகளின் அழகையே மொய்க்கும். மணப்பெண்ணுக்கு அலங்காரம் செய்வது என்பது மிக முக்கியமானது. அத்தகைய அலங்காரத்தினை தங்கள் இடத்திற்கே வந்து தங்கள் உடனே இருந்து சீரும் சிறப்பாக செய்து தருகின்றோம். மேலும் எங்களின் சிறப்பம்சமான மெஹந்தி போடுதல், சிகை அலங்காரம், கொண்டை போடுதல் , அனைத்து மதத்தினர் போற்றும் வகையில் சிறப்பாக அலங்காரம் செய்யப்படும்.